T-20 உலகக்கிண்ணத் தொடரி 34 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி சிம்பாப்வே அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடிலைய்ட் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், சிம்பாப்வே அணியும், நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.