லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்ததில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சுமார் 2,800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்ததில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சுமார் 2,800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈரானின் லெபனானுக்கான தூதர் மொஜ்தபா அமானியும் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. லெபனானின் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் ( Sep 17, 2024 இலங்கை நேரப்படி மாலை 6 மணி) சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இதில் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாட், சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் அமைச்சர் ஃபிராஸ் அபியாட் கூறுகையில், ”பேஜர் கருவிகள் வெடித்ததில் ஒரு சிறுமி உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். சுமார் 2,800 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 200க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காயங்கள் பெரும்பாலும் முகம், கைகள் மற்றும் வயிற்றில் இருந்தன” என்று கூறினார்.
கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவரின் 10 வயது குழந்தை கொல்லப்பட்டதாகவும், ஹிஸ்புல்லாவின் சட்டமியற்றுபவர்களான அலி அம்மார் மற்றும் ஹசன் ஃபட்லல்லாஹ் ஆகியோரின் குழந்தைகளும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஹில்புல்லா அமைப்பினர் குற்றச்சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஹில்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இதுவரை எதிர்கொண்ட மோசமான தாக்குதல் என்றும் மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் என்றும் ஹில்புல்லா அமைப்பு கூறியுள்ளது. அனைத்து பேஜர்களும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் வெடித்தாகவும், தகவல் தொடர்பு வலையமைப்பின் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் என்று ஹில்புல்லா கூறியுள்ளது.
பேஜர் குண்டுவெடிப்புகளுக்கு இஸ்ரேலே முழு பொறுப்பு” என்று ஹிஸ்புல்லா அமைப்பினர் கூறினர். மேலும், இந்த தாக்குதலில் ஒரு சிறுமியும் அவரது இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாவில் உள்ள அதிகாரிகள் பேஜர் ஒரே நேரத்தில் வெடித்ததற்கான காரணங்களை கண்டறிய விரிவான பாதுகாப்பு மற்றும் அறிவியல் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பேஜர் என்பது ஒரு மின்னணு தொலைத்தொடர்பு சாதனமாகும். இது ஒரு வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனமாகும், இது எழுத்து மற்றும் சில சமயங்களில் குரல் செய்திகளைப் பெறும். இதில் பல்வேறு வகையான பேஜர்கள் உள்ளன. ஒரு வழி பேஜர் என்பது மெசேஜ்களை மட்டுமே பெற முடியும். அதேநேரத்தில் வருகிற மெசேஜ்களை பதிலளிக்க பயன்படுத்துவது இருவழி பேஜர். 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் இந்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனம் தான் தற்போது வெடித்து சிதறிய உள்ளது. இதில் தான் 2800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் லெபனான் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.