பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரேந்து பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை(12) காலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து தனது மாட்டிற்கு புல்வெட்டுவதற்கு பட்டிருப்பு பாலத்தினூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதியின் ஆலோசனைக்கு அமைவாகவே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் களுவாஞ்சிகுடி 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பேரின்பராசா பிரதீபன்(வயது-29)என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் பயணித்த துவிச்சக்கர வண்டியும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.