வெடித்து சிதறிய இலங்கை விமானபடை விமானம்

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 போர் பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல மினுவாங்கொட பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள்  பாராசூட்களின் உதவியுடன் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.