கொழும்பில் காற்றின் தரச்சுட்டெண் ஆரோக்கியமற்றது. என எச்சரிக்கை.

கொழும்பு காற்றின் தரச் சுட்டெண், ஆரோக்கியமற்ற நிலையை நோக்கி மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையின் பல நகரங்களில், காற்றின் தரச்சுட்டெண் 150 – 200 வரையாக நிலவுகிறது.

இதனையே ஆரோக்கியமற்ற நிலை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரச்சுட்டெண் என்பது, இந்த மாசுபாடுகள் தரை மட்ட ஓசோன், துகள் மாசுபாடு, கார்பன் மோனாக்சைட், சல்பர் டை ஒக்சைட் மற்றும் நைட்ரஜன் டை ஒக்சைட் ஆகிய ஐந்து முக்கிய காற்று மாசுபடுத்திகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில், சமூகத்தில், சுவாசம், நுரையீரல் அல்லது இதய ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட்ட பாதிக்கப்படக்கூடியவர்கள் விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அல்லது சிவப்பு வரம்பில் 151-200 இருந்தால் அல்லது குறைந்தால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் வெளியில் வேலை செய்வதையோ அல்லது செயல்பாடுகளையோ தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

அத்துடன் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் உள்ளவர்கள் வெளிப்புறங்களில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.