வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குருமன்காடு பகுதியை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றையதினம் (31-05-2022) அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
இருப்பினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.