யாழ்.பல்கலைகழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் மாணவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைகழகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மாணவர்கள் அங்கு நின்றிருந்த நிலையில் திடீரென பல்கலைகழகத்திற்குள் நுழைந்த இருவர் மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த ஆண் மாணவர் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மாணவர்கள் குறித்த இருவரையும் மடக்கி பிடித்து கோப்பாய் பொலஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.