தனது தந்தையுடன் இணைந்து கணவரை கொலை செய்த பெண்

தனது தந்தையுடன் இணைந்து பொல்லால் தாக்கி கணவரை கொலை செய்த மனைவிக்கு 7 வருட சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

அத்துடன், அவரின் தந்தைக்கு பத்து வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையு,ம் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதித்து பலப்பிட்டிய உயர்நீதிமன்ற நீதியரசர் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.

இந்த கொடூர சம்பவம் கொஸ்கொட, வத்துரவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இல.540,வத்துரவெல, கொஸ்கோட என்ற விலாசத்தை சேர்ந்த லக்கானி சத்துரி (26) என்ற பெண்ணுக்கும், அதே விலாசத்தை சேர்ந்த சந்திரலால் டி சில்வா (58) என்ற இருவருக்குமே இத் தண்டனை விதிக்கப்பட்டது.

யகட்டுவில என்ற இடத்தைச் சேர்ந்த திலின பெரேரா கருணாரட்ன என்பவரின் கொலை தொடர்பாக இவர்கள் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2017 மே 30 ஆம் திகதி இக்கொலை சம்பவம் இடம்பெற்ற நிலையில் அதன் வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.