இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் பதில் செயலாளரும், ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான அமிதாப் சௌத்திரி காலமானார்.
மாரடைப்பினால் இவர் தமது 58 ஆவது வயதில் ராஞ்சியில் நேற்றைய தினம் காலமானார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு கிரிக்கட் துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.