மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டில் சில மாற்றங்களைச் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது இரவில் இரண்டு மணி நேரம் 15 நிமிடம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், மின்வெட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.