கொழும்பு – முகத்துவாரம் (மோதர) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாவத்த, ரெட்பானாவத்த பகுதியில் இன்று இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 23 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டியில் வந்த இனங்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.