யாழ் நல்லுார் பிரதேச செயலர் பிரிவுகளில் இன்று சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம்

யாழ்ப்பாணம் – நல்லுார் பிரதேச செயலர் பிரிவுகளில் 600 சமையல் எரிவாயு சிலின்டர்கள் இன்று விநியோகம் செய்யப்படவுள்ளது.

இரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் தலா 300 சிலின்டர்கள் வீதம் விநியோகிக்கப்படவுள்ளது.

மேலும் தலா 8 விநியோகஸ்த்தர்கள் ஊடாக இவை விநியோகம் செய்யப்படவுள்ளது.

அதேபோல் சமையல் எரிவாயு சிலின்டர் பெறுவதற்கு குடும்ப அட்டை கட்டாயம் எனவும்,

முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.