T-20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01 இல் நடைபெற்ற தொடரின் 33 வது போட்டியில், இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது இப்போட்டியில், இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்து அணியும் மோதின.
இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து, 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இதனால், இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.