மெக்சிகோவை தாக்கிய சூறாவளி -11 பேர் பலி, 33 பேர் மாயம்

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

மணிக்கு 169 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து குடியிருப்புகள் சேதமடைந்தன.

கடுமையான சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், பல்வேறு மாகாணங்களில் ஆறுகள் பாய்ந்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 33 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.