கணவன் தாக்கியதில் உடைந்த பல்லை விழுங்கிய மனைவி சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் சாவகச்சோி – சங்கத்தானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. நிறைபோதையில் வந்த கணவன் தனக்கு உணவு வழங்க தாமதமானதாக கூறி மனைவியை மூர்க்கமாக தாக்கியுள்ளார்.
இதன்போது 43 வயதான மனைவியின் பல் உடைந்த நிலையில் உடைந்த பல்லை மனைவி விழுங்கியுள்ளார். இந்நிலையல் உடனடியாக அவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.