பளை – இயக்கச்சியில் தென்னம் தோட்டத்திற்கு தீ வைத்த விஷமிகள்

பளை – இயக்கச்சி பகுதியிலுள்ள காணி ஒன்றில் இனந்தெரியாத நபர்கள் தீ மூட்டியதில் பயன்த மரங்கள் தீயில் எரிந்துள்ளன.

குறித்த பகுதியில் உள்ள காணியில் தென்னங்கன்று நடப்பட்டு அவை வளர்ந்து பயன்தரும் நிலையை அடைந்திருந்தது.

இந்நிலையில் இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டிருக்கின்றது. தீப்பரவல் தொடர்பாக பிரதேசவாசிகள் கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவிற்கு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கரைச்சி பிரதேச சபையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இருப்பினும் தீப் பரவல் குறித்த காணியில் காணப்பட்ட பனை மரங்களில் பரவியதால் பனைமரங்களில் ஏற்பட்ட தீ பயன்தரு தென்னை மரங்களில் பரவி தென்னை மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

இதனால் குறித்த காணி உரிமையாளர்கள் பெரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.