நாடு முழுவதும் டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை

நாடு முழுவதும் டீசல் கையிருப்பு குறைந்துள்ள நிலையில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் டீசல் நிரப்பிய கப்பல் ஒன்று எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.