இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலைகள்

எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற் 1020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பைக்கற் 2545 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.