ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லாமல் பணியாற்ற பிரதமர் முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரச செலவீனங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.