இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் – கஜேந்திரன் கோரிக்கை

இந்தியாவின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்வதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களது விடுதலையை வலியுறுத்தி நேற்று 17ஆவது நாளாகவும் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், அவர்களது உடல் நிலையை கருத்திற்கொண்டு தமிழக முதலமைச்சர் உடனடியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.