முல்லைத்தீவு -மல்லாவி, பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் பாலிநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அழகப்பன் அமிர்தலிங்கம் (40) என தெரியவந்துள்ளது.
சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்