சுமார் 540 சமையல் எரிவாயு சிலின்டர்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரிடமிருந்து 540 சமையல் எரிவாயு சிலின்டர்கள்,
மற்றும் 54 வெற்று சிலின்டர்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக
கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.