தேர் கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதே அள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் இன்று தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், தேர்த்திருவிழாவின் போது திடீரென தேர் கவிழ்ந்தது. அப்போது தேர் பக்தர்கள் மீது விழுந்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகினர்.

மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.