கிளிநொச்சியில் போத்தலால் குத்தப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த நபர் மரணம்

கிளிநொச்சி – பரந்தன் A- 9 வீதியில் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (04-06-2022) இரவு குற்றுயிராய் கிடந்த குறித்த நபரை மீட்ட கடை உரிமையாளர் ஒருவர் பொதுமக்கள் உதவியுடன் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளார். குறித்த நபருடைய உடலில் போத்தலினால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளதாகவும் அதிலிருந்து அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கின்றது.

குறித்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி

மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.