வவுனியாவில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து குழந்தை பலி

வவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயதுக் குழந்தை மரணமடைந்துள்ளது.

இன்று (03) காலை குறித்த குழந்தை பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் ஏனைய சிறுவர்களுடன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தது.

எனினும் சற்று நேரத்தில் குழந்தையின் குரல் கேட்காத நிலையில் அவரது தாயார் குழந்தையை தேடியுள்ளார்.
இதன்போது அருகில் இருந்த நீர்தொட்டியில் குழந்தை வீழ்ந்து கிடந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் சேமமடு பகுதியை சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி என்ற இரண்டரை வயது குழந்தையே மரணமடைந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்