4000 ரூபாவாக அதிகரிக்கவுள்ள சிமெந்தின் விலை

இலங்கையில் எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாயை தாண்டும் என தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளமை நாட்டு மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

வரி அதிகரிப்புடன் சீமெந்து விலையும் அதிகரிக்கும் என அச்சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 3000 ரூபாயை அண்மித்துள்ளதாக சுட்டிக்காட்டிய தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் , சீமெந்தின் விலை மேலும் அதிகரிக்குமெனவும் கூறினார்.