யாழில் கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை

அரசினால் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 கிலோ எடையுடைய நாட்டரிசி 3700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் செயற்படும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் குறித்த அரிசி உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராகஎந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை குறித்த அரசின் அரிசி ஆலையின் அரிசி யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் 3700 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் இதனை மாவட்ட செயலகம் கண்டுகொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்,