ரஷ்ய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 28 வயது நபர் கைது

களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தில் ரஷ்ய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய பெண் மஹா வஸ்கடுவ கடற்கரையில் உடல் பயிற்சிக்காகச் சென்றிருந்த வேளையில் குறித்த சந்தேக நபர் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

36 வயதுடைய ரஷ்ய பெண்ணின் முறைப்பாட்டையடுத்து களுத்துறை வடக்கு காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.