T20 அணி தலைவர் பதவியிலிருந்து வனிந்து ராஜினாமா

இலங்கை ரி20 அணியின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு வனிந்து ஹசரங்க தீர்மானித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இதனை தெரிவித்துள்ளது

இலங்கை கிரிக்கெட்டின் நலன்களை கருத்தில்கொண்டு தலைமைப்பதவியை இராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாக வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் எனினும் தான் அணிவீரராக தொடர்வேன் என தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அவரது முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவர் தொடர்ந்தும் அணியின் முக்கிய வீரராக விளங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளது.