நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தம்புத்தேகம லுனுவெவயில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அஹுங்கல்ல பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவொன்று அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயது மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.