அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

தற்போது 12 முதல் 20 வரையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமின் விஜேசிங்க தெரிவித்தார்.

அதேபோல், 120 முதல் 150 வரை அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் வைத்தியர் சமின் விஜேசிங்க குறிப்பிட்டார்.