மோட்டார் சைக்கிள் திருடிய இரு இராணுவ சிப்பாய்கள் உட்பட 3 பேர் கைது

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்கள் இருவர் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிவந்த ஒருவர் அடங்கலாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலன்ன பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 7 இலட்சம் ரூபா பெறுமதியான 2 மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை மறைத்து வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதான இருவர் தற்போது இராணுவத்தில் பணியாற்றுவதுடன், விடுமுறையில் வீடு திரும்பியிருந்தனர், மற்றைய நபர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் என கூறப்படுகின்றது,

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.