வவுனியாயில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு, மேலும் இருவர் ஆபத்தான நிலையில்

நண்பர்களுடன் குளத்தில் நீராட சென்றிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா – ஈரப்பொியகுளத்தில் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் மீட்கப்பட்ட இரு சிறுவர்கள் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளது.

மேலும் 15, 16 வயதான இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.