யாழ். அரியாலையில் புகைரதம் மீது கார் மோதி கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த புகையிரதம் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி இருவர் அரியாலை பகுதியில் உயிரிழந்தனர்.

விபத்து காரணமாக சில மணி நேரம் புகையிரதம் பயணம் தடைப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு விரைந்த பொலீசார் விபத்தில் சிக்கி கொண்டவர்களையும் காரையும் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.