கம்பஹா மாவட்டத்தின் போத்தல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ர்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 மற்றும் 12 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு பாதிக்கபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுமிகள் இருவரையும் அவர்களின் வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றே சந்தேக நபர்கள் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் 30 மற்றும் 21 வயதுடைய இருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.