செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

வழமைப்போன்று இலங்கைக்கான மருந்து விநியோகம் ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை அன்பளிப்பாளர்களின் ஊடாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.