நாளை (10) முதல் நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, உள்ளக செயற்பாடுகள் போன்று பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, முகக்கவசம் அணிவது தொடர்பான கட்டுப்பாடுகள் நாளை முதல் நீக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.