பண்டாரகம – களுத்துறை பிரதான வீதியின் மொரோந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு உந்துருளிப் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தாம் செலுத்திக்கொண்டிருந்த இரண்டு உந்துருளிகளும் நேருக்கு நேர் மோதியதில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 18 அகவை கொண்ட வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஏனைய இளைஞர்கள் குழுவுடன் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞர்களுடன் உந்துருளிப் பந்தயத்தில் ஈடுபட்ட ஏனைய இளைஞர்கள் விபத்தை அடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.
விபத்தின் பின்னர் காயங்களுடன் இரண்டு இளைஞர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.