பாதுக்கையில் இருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்று ஹங்வெல்ல எம்புலுகம சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதிக் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பாரவூர்தியின் சாரதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.