தென்மேற்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 24 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கிங்ஸ்டன்-அபான்-தேம்ஸில் உள்ள ஃபேர்ஃபீல்ட் சாலைக்கு தாம் அழைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு துணை மருத்துவர்கள் மற்றும் லண்டன் அவசரகாவுவண்டி சேவையும் அழைக்கப்பட்டதாகவும், எனினும், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.