இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தானிய கிரிக்கெட் அணியின் தவைலர் பாபர் அசாம், தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை.
அத்துடன் ஓட்டங்களை பெறுவதிலும் தடுமாறி வருகிறார்.
இதனால் அவரை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
விராட் கோலியை இருபதுக்கு20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் கபில்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இதுவும் கடந்து போகும். வலிமையுடன் இருங்கள் விராட் கோலி என பதிவிட்டுள்ளார்.