Monday, September 16, 2024
Homeசெய்திகள்இலங்கை"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்! - ஹிருணிகா பிரேமச்சந்திர

“எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்! – ஹிருணிகா பிரேமச்சந்திர

னது மார்பகங்கள் குறித்து தான் பெருமை அடைவதாக முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர  தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக நேற்றைய தினம் (22.6.2022) ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது.

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் செல்ல முடியாதவாறு, போலீஸார் பாதுகாப்பு வேலிகளை அமைத்து, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை ஏற்படுத்தியிருந்தனர். ஹிருணிகா பிரேமசந்திர, அந்த தடைகளை மீறி, பிரதமரின் வீட்டிற்குள் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில், போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சிலர், ஹிருணிகா பிரேமசந்திரவின் மார்பகங்கள் குறித்து தவறான பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.இந்த பதிவுகள் குறித்து, ஹிருணிகா பிரேமசந்திர, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

“எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன் அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!”என அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments