பிரேசிலின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் பலி.

பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் பீலே உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

 82 வயதான பீலேவுக்கு குடல் பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை தேறாமல் இருந்து வந்தது.

சாவோ பாலோவில் உள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த பீலே, உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் 3 உலகக் கோப்பைகளையும் வென்றிருக்கிறார். மேலும், அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார்.

பீலேவின் மறைவிற்கு உலக கால்பந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.