ஜெகதீஸ்வரன் ஜகி என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற ”டேக்வாண்டோ” போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கேகலை வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்ற தேசிய மட்ட  ”டேக்வாண்டோ” போட்டியில்  பெண்கள் பிரிவில்  மன்னார் / தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவி ஜெகதீஸ்வரன் ஜகி இவ்வாறு வெள்ளிப் பதக்கம் பெற்று குறித்த பாடசாலைக்கும், மடு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

  மேலும் ஆண்கள் பிரிவில் மாணவன் ற.காந்தரூபன் வெண்கலப் பதக்கம் பெற்று  பெருமை சேர்த்துள்ளார்.

தட்சணாமருதமடு என்ற கிராமத்திலிருந்து சென்று தேசியளவில் சாதித்துள்ள குறித்த மாணவி மற்றும் மாணவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ஜெகதீஸ்வரன் ஜகி