கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் சாதனை வீரன்!

உலக சாதனை படைத்த தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆன்டர்சன் (James Michael Anderson) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 41 வயதான ஜேம்ஸ் ஆன்டர்சன் மொத்தம் 40037 பந்துகளை வீசியுள்ளதுடன், 18627 ஓட்டங்களை கொடுத்து மொத்தமாக 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிவேக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமாகி தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜேம்ஸ் ஆன்டர்சன், அதே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் உலக சாதனை படைத்தார்.

கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி லோர்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்பதுடன், 350 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தி அழியாத உலக சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.