மலையகத்தில் காணாமல்போன யுவதிகள் கொழும்பில்

அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாகக் காணாமல்போயிருந்த இரண்டு யுவதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

குறித்த இருவரும் கொழும்பில் இருக்கின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்கச் சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பாதமையால் அக்கரப்பத்தனைப் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

காணாமல்போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் 15 மற்றும் 18 வயதுகளையுடைய யுவதிகளாவர்.

இந்நிலையில், குறித்த இருவரும் கொழும்பில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது