யாழ். பொன்னாலையில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

யாழ்.பொன்னாலை பகுதியில் நேற்றய தினம் இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சசம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57) பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.