பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்பம் செயல்முறை பரீட்சை நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலை பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்களது முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.