ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பாடசாலை நாட்கள் குறைப்பு

நாட்டில் சமகாலத்தில் உருவாகியுள்ள பாரிய நெருக்கடியினை கருத்தில் கொண்டு பாடசாலை நாட்களை குறைப்பதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளது.

இது குறித்து இன்று (10) கல்வி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் பாடசாலை நாட்களை மட்டுப்படுத்துவது தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படும்.

பலருக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், எரிபொருள் நெருக்கடி பாடசாலை பிள்ளைகள் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்திதுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.